சூடா ஒரு டீ:
'ஜல்' லுனு ஒரு புயல் தமிழகத்தை தாக்கும் அபாயம் இருப்பதாக சொல்றாங்க. சென்னையிலிருன்து 700 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்த இப்புயல், மெல்ல நகரத் தொடங்கி சென்னையை நெருங்குவதாக தகவல். 'டோல்' கட்டாமல் உள்ளே வரும் இந்த புயல், நனமை தரும் புயலாக இருக்கட்டும். பட்டாசுகளின் புகை மூடியிருக்கும் சென்னையை தன் நீர் கொண்டு கழுவி, மாசற்றாதாக்கி தூய்மை செய்து விட்டு போகட்டும்... 'ஜல்'லுனு வரும் புயல், ஊரை 'ஜில்'லுனு ஆக்கிட்டு, 'சல்'லுனு போய்டட்டும்.
சும்மா ஒரு பஜ்ஜி:
அமெரிக்க அதிபர் ஒபாமா 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். ஏகப்பட்ட செலவு, எக்கச்சக்க பாதுகாப்பு, ஏகத்துக்கு வரவேற்பு னு டெல்லியே அமர்க்களப்பட்டு போயிருக்காம். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? நம்ம பசங்க சரியான அம்னீசியா காரணுக... பழசைஎல்லாம் சீக்கிரம் மறந்துடுவானுக.... நம்ம நாட்டோட வெளியுறவு அமைச்சரா இருந்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் அமெரிக்கா போயிருந்தப்போ............ அவரை அரைக்கால் டவுசரோட விட்டு சோதிச்சாங்க, பாதுகாப்பு ஏற்பாடாம். ஆனா அவரு இங்க வந்தா, மறுபடியும் நம்ம ஆட்களையே சோதிக்குறானுக.. சோதனை மேல் சோதனை, போதுமடா..................
லாஸ்ட் ல ஒரு பட்டர் பிஸ்கட்:
தீபாவளி அன்னைக்கு டாஸ்மாக் ல செம வியாபாரமாம். தமிழக டாஸ்மாக் கடைகளின் இந்த வருடத்திற்கான விற்பனை இலக்கான 300 கோடியைத் தாண்டி விற்பனை நடந்திருக்காம்... தீபாவளி அன்னைக்கு எல்லா குடிமகன்களின் முகத்திலும் (அதாவது, வாயில்) மகிழ்ச்சி 'பொங்கியது' எனலாம்.
எழுத்துத் திறமையை வளர்த்துக்கொள்ள வலைப்பூ நுழைவு ஒரு நல்ல வாய்ப்பு. வாழ்க!
ReplyDelete