Tuesday, October 19, 2010

பலகாரம்_0002: காமன் வெல்த் கலாட்டா

சூடா ஒரு டீ

ரெண்டு திருடனுக ஒண்ணா சேர்ந்து திருடிட்டு, கெடச்ச பொருளை பங்கு வைக்குறதுல ரெண்டு பேருக்கிடையில சண்டை வந்துச்சாம். அதுல ஒருத்தன் போலிஸ்கிட்டேயே போயி.. இன்னொருத்தனை மாட்டி விட்டுருக்கான்.. போலீசும் 'அடிச்சது லக்கு' னு ரெண்டு பேரையும் மடக்கி....அப்புறம்?... லட்டில தட்டி விசாரிச்சாங்க னு மட்டும் நெனைக்காதீங்க... ரெண்டு திருடர்களையும் நேர்ல சந்திக்க வச்சு பேச வச்சு இருக்காங்க. இப்படி போச்சாம் அந்த பேச்சு...

தி1: நான் வரலை னு தான் சொன்னேன். நீ தான் திருட கூட்டிட்டு போனே....
தி2: ஆனா நீ தானே வீட்டுக்காரங்களை பிடிச்சு தூண்ல கட்டினே...

தி1: ஆனா நீ தானே அவங்களை மிரட்டி பீரோ சாவி வாங்கினே...

தி2: ஆனா பீரோவைத் திறந்த்து நீ தானே...

தி1: நான் திறந்தாலும் நீ தானே உள்ளே உள்ள எல்லாத்தையும் எடுத்து சாக்கு ல கட்டினே...


தி2: சரி, இந்த ஒன்னு இருக்கட்டும், எத்தனை இடத்துல நீ மட்டும் போயி திருடி இருக்கே.....

தி1: நீ மட்டும் என்ன நல்லவனா? போன வாரம் நம்ம இன்ஸ்பெக்டர் வீட்லயே திருடினியே......

ஊர்ல நடந்த எல்லா திருட்டிற்கும் யார் காரணம் னு இப்போ இன்ஸ்பெக்டருக்கு தெரிஞ்சு போச்சு...

அது மாதிரி தான் இருக்கு. காமன் வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுல கல்மாடி ஊழலுன்னு உலகமே சிரிப்பா சிரிக்க...அதுல முதல் அமைச்சர் ஷீலா தீட்சித்துக்கும் தொடர்பு இருக்குது கல்மாடியே சொல்லி இருக்குறது....செம பரபரப்பை உருவாக்கி இருக்கின்றது....ஒன்னு செய்யலாம்.. அரசே தன் சொந்த செலவுல ரெண்டே ரெண்டு விழா மேடைக்கு ஏற்பாடு செய்யலாம்... முதல் நால் கல்மாடி பேச வைக்கலாம்... ஷீலாவின் ஊழல்கள் வெளிவரும்..அடுத்த நாள் ஷீலாவைப் பேச வைக்கலாம்... கல்மாடியின் ஊழல் வெளிவரும்..வெரி சிம்பிள்.. சி.பி.ஐ செலவும் இல்லை, விசாரணை செலவும் இல்லை...

ஊழல் பரபரப்பு..... சே..இதெல்லாம் ஒரு பொழப்பு....

சும்மா ஒரு பஜ்ஜி:

வட்டு எறிதல் போட்டியில் உலக சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலியாவின் தானி சாமுவல்,காமன் வெல்த்தில் தங்கம் வென்ற இந்தியாவின் பூனியாவுகு சவால் விடுத்து இருக்கின்றார்.உடல் நிலைகுறைவு காரணமாக போட்டியில் பங்கேற்காத ஆஸி வீராங்கனை, பயிற்சி போதாத காரணத்தால் தான் பங்கேற்கவில்லை என நம்ம வீராங்கனை சொல்ல, அந்த சொல் தாங்கா முடியாத ஆஸி. வீராங்கனை, "மோதி பார்க்கலாமா? நீ ஜெயிச்சா 20 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசா தர்றேன்" னு ஒரே கர்ஜனை... "சரி வா பார்த்துடலாம்" னு நம்மவங்களும் ரெடி சொல்லியாச்சு.போட்டி நடக்குமோ நடக்காதோ... ஆனா இந்த விஷயம் படிக்குறதுக்கு செம இன்ட்ரஸ்டிங்கா இருந்தது...

லாஸ்ட்ல ஒரு பட்டர் பிஸ்கட்:

(*) மின் வாரிய ஊழியர்களுக்கு 20% போனஸ்....... மின்சாரம் சம்பந்தபட்ட நியூஸ்கள்-ல இது ஒன்னு தான் மகிழ்ச்சி தருவதா இருக்கு.....

(*) 'காமன்' வெல்த்-னு சொல்லிட்டு நீங்க மட்டும் சொத்து சேர்த்துகிட்டா எப்படி... சொல்லுங்க கல்மாடி சார்?

2 comments:

  1. //'காமன்' வெல்த்-னு சொல்லிட்டு நீங்க மட்டும் சொத்து சேர்த்துகிட்டா எப்படி... சொல்லுங்க கல்மாடி சார்? //

    நன்று.

    க. சுரேந்திரன்.
    அகம் புறம்

    ReplyDelete
  2. வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி சுரேந்திரன் சார்.

    ReplyDelete