Friday, October 15, 2010

பலகாரம்_0001:ஒரு டீ,ஒரு பஜ்ஜி,ஒரு பட்டர் பிஸ்கட்



இந்த வலைப்பக்கத்தில் வரும் வழமையான பதிவுகளும் மூன்றே பகுதிகளைக் கொண்டிருக்கும். (அவை தவிர என்னுடைய படைப்புகளும் அவ்வப்போது வெளிவரும்)

1. சூடா ஒரு டீ : அதாகப்பட்டது, சுட சுட சமாச்சாரங்கள்

2. சும்மா ஒரு பஜ்ஜி : அவ்வளவா முக்கியமில்லாத மெதுவான சமாச்சாரங்கள், அட சே...சாதாரண விஷயங்கள்

3. ஒரு பட்டர் பிஸ்கட் : லாஸ்டா ஒரு இனிப்பு..

சாப்பிடலாம் வாங்க.. என்னப்பா இது நிறைய உளர்றேனே.. தலைப்பையே மாதிட்டேனே.. விடுமுறைக்கு ஊருக்கு வந்து இருக்கேன்.. வீட்டுல நடக்குற தடல்புடலான கவனிப்பு ஒரு வேளை காரணமா இருக்குமோ? சரி விடுங்க...வாசிக்கலாம் வாங்க..

***********************************************************************************


சூடா ஒரு டீ:

யாரு எந்த பக்கம் னு தமிழ் நாட்டுல ஒரே பீதி.. தேர்தல் ஜுரம் னு கூட பத்திரிக்கை நிருபர்(டாக்டர்)கள் எழுதுறாங்க.. திருச்சியில அவங்க கூட்டம்..நாகை ல இவங்க கூட்டம்.. கோவை ல இன்னொருத்தவங்க கூட்டம் னு எங்கு பார்த்தாலும் கூட்டம். இதை எல்லாம் விட கூட்டம் எங்கேனு தெரியுமா? டாஸ்மாக் கடை வாசல் ல கூடுது பாருங்க ஒரு கூட்டம்.. அதுல ஒருத்தன் இப்படி சொல்றான் "வர்ற தேர்தல் ல யாரு ஜெயிச்சாலும் பரவா இல்லை, குவார்ட்டர் விலை குறைஞ்சா சரி" 'குடி'மகன்களின் கவலை இது. உனக்கு எப்படி இது தெரியும் னு நீங்க கேக்குறது எனக்கு இங்கே கேக்குது..குடிச்சுட்டு ஒருத்தன் சத்தமா உளறிட்டே போனான்.. செவி வழிச் செய்தி..சரி விஷயத்துக்கு வருவோம் ...

பத்திரிக்கை ல வர்ற கட்டுரைகளை எல்லாம் படிக்கும் போது, ஒன்னு வெளங்குது. இலையை கையில் பிடிப்பார்கள் போல் தெரிகின்றது.. பிடிக்கட்டும், மக்கள் விழித்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். மதம் சார்ந்த அரசியல் இனியும்-யாராலும் செய்ய முடியாது, மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பது தான் சாமான்யனின் வேண்டுகோள்.

சும்மா ஒரு பஜ்ஜி:

"இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக" னு சொல்லிட்டு, அந்த தொலைக்காட்சியிலயே ஆறு முறை ஒரே படத்தை காட்டுற ஒரு டி.வி, ஆயுத பூஜை சிறப்பு நிக்ழ்ச்சிகளுக்கு என்ன பேரு வச்சு இருக்கு தெரியுமா? "விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகளாம்". அப்டீனா போன வாரம் வந்த சனிக்கிழமை புரோகிராம்களுக்கு எல்லாம் ஏன் அந்த பேரு வைக்கலை னு கேட்டு சொல்லுங்க..

ஒரு பட்டர் பிஸ்கட் :

ஐயையோ .. ஆஃபீசுக்கு லேட்டாகிடுச்சே னு அவசரம் அவசரமா ஒரு ஆட்டோ பிடிச்சு போய்கிட்டு இருந்தப்போ, முன்னாடி போர ஆட்டோவில் எழுதி இருந்த வசனம் இது ...

"ரோஜா சொன்னது 'காதலிக்கத் தெரியாத பெண்ணின் கூந்தலில் இருப்பதை விட காதலிக்கத் தெரிந்தவனின் கல்லறையின் மேலிருப்பதே சிறப்பு'"

2 comments: